ஞாயிறு, அக்டோபர் 26, 2008

பல விதமான Blogs பார்த்து படித்து எனக்கும் ஒரு சபலம். நானும் எழுத வேண்டும் என்று. இன்று முதல் தொடங்குகிறேன். முதலில் சில கவிதைகள். ( அட பாவி நீயுமா ?)

இவை எல்லாம் என்னுடைய கம்பெனி நண்பர்கள் என்னை கவிழ்த்து விட்ட போது எழுதியவை.

காலம் என்பது சுருக்கு கயிறு
கழுத்து நெரிப்பது தெரியாது!
தெரியும் சமயம்,
காலமும் இல்லை, கழுத்தும் இல்லை!
* * * * * ** * * * * ** * * * * ** * * * * ** * * * * *

நெடிய பயணத்தில்
நட்பு ஒரு சக பிரயாணி.
எங்கும் பிரியலாம்; எப்படியும் முடியலாம்.